இசையமைப்பாளர் இளையராஜாவை நடிகர் கமல் ஹாசன் இன்று நேரில் சந்தித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் கமல் ஹாசன் நடித்து வருகிறார். விரைவில் தொடங்கவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மீண்டும் பணியாற்றவுள்ளார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை அவருடைய புதிய ஸ்டூடியோவில் இன்று சந்தித்தார் நடிகர் கமல் ஹாசன். இந்தச் சந்திப்பின் புகைப்படங்களும் விடியோவும் வெளியாகியுள்ளன.
https://www.youtube.com/watch?v=Fx72EDaptdA