2ஆம் நாள் உக்ரைன் யுத்தம்!! எங்களைத் தனிமையில் விட்டுவிட்டுனர்!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, February 25, 2022

2ஆம் நாள் உக்ரைன் யுத்தம்!! எங்களைத் தனிமையில் விட்டுவிட்டுனர்!!



உக்ரைன் மீதான இரண்டாம் நாள் படையெடுப்பை ரஷ்யப் படைகள் முன்னெடுத்துவருகின்றன. இரவு முழுவதும் ஊடரங்கு அமுலில் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஐரோப்பாவில் நடைபெறும் மிகப் பொிய தரைப்போர் இதுவாகும்.

கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள உக்ரேனிய நகரங்கள் மீதான முன்னேற்றத்திற்குப் பிறகு, ரஷ்யா உக்ரேனிய தலைநகர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துகிறது. நாடு முழுவதும் போர் நடைபெறுகிறது. 

தலைநகர் கீய்விற்கு மக்கள் செறிந்து வாழும் பகுதியான போஸ்னியாகேவில் இரவு இரவாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அங்கு அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் பல பகுதிகள் தீம்பிழம்புகளுடன்  எரிந்தது.

குறைந்தது 8 பேர் காயமடைந்தனர்.

பெரும் சத்தங்களுடன் தலைநகரில் வெடியோசைகள் செவிமடுக்கப்படுகின்றன.

தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரஷ்யாவின் விமானம் ஒன்று இன்று தலைநகரில் வீழ்ந்துள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இன்று காலை தனது உரையில் நாட்டு மக்களுக்கு ஆற்யி உரையில் உக்ரைனை மேற்கு நாடுகள் தனிமையில் விட்டுவிட்டனர் என கவலையை வெளிப்படுத்தினார். மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் சக்தியை அவர் கேள்வி எழுப்பினார். உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகள் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன குற்றம் சாட்டினார்.

உக்ரைனில் இராணுவத்தினைரை மட்டுமே குறிவைப்பதாகவும் பொதுமக்கள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என ரஷ்யா வாக்குறுதி அளித்துள்ளது.

தலைநகர் கிய்வில் 2.8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். மக்கள் பதுக்கு குழிகளுக்கும் குறிப்பாக நிலக்கீழ் அறைகள் மற்றும் நிலக்கீழ்  தொடருந்து நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நேற்றைய முதல் நாள் சண்டையில் இராணுவத்தினர் உட்பட 137 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

13 படையினர் கருங்கடலில் உள்ள பாம்புத் தீவை தங்க வைக்க போராடியதில்  உயிரிழந்துள்ளனர்.