அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் கொண்டாடும் படி வலிமை படம் இருப்பதால் இப்படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வலிமை தான் அஜித் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் இருக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இதனிடையே தற்போது வலிமை படத்தின் முதல் நாள் சிங்கப்பூர் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் அங்கு 50% இருக்கைகளுடன் SG$203K வரை வசூல் செய்துள்ளதாம்.
இந்திய மதிப்பின்படி இப்படம் அங்கு ரூ. 1.13 கோடி வசூல் செய்துள்ளது, இதனால் வலிமை திரைப்படம் தான் சிங்கப்பூரில் அதிக வசூல் செய்த அஜித்தின் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. https://youtu.be/dvIajDCsTIk