ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் இன்று உரை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, September 21, 2021

ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் இன்று உரை

 


ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று உரையாற்ற உள்ளார்.


மனித சமூகத்தின் நிலையான இருப்புக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் பற்றி இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

கொவிட் வைரஸ் பரவல் பற்றியும் இன்றைய கூட்டத்தொடரின் போது ஆராயப்பட உள்ளது. இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஐக்கிய நாடுகளின் 76வது பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதியின் உரை இன்று இடம்பெறவுள்ளது. மனித உரிமைகளை பாதுகாத்தல் கொவிட் வைரஸ் பரவலுக்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள வேலைத்திட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போதைய நிலை என்பன பற்றியும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளிக்கவுள்ளார்.