பல்வேறு நிபந்தனைகளுடன் மாகாணங்களுக்கிடையேயா போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 29, 2021

பல்வேறு நிபந்தனைகளுடன் மாகாணங்களுக்கிடையேயா போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!

 



கொரோனா தொற்றை அடுத்து தடைப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துச் சேவை எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து மிள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி தனியார் மற்றும் அரச பஸ் சேவைகளை வருகின்ற ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையே மீண்டும் நடத்த அனுமதியளிப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அலுவலக சேவை நேரங்களில் மாத்திரம் இந்த பஸ் போக்குவரத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்படும் என்றும் அவர் இன்று வியாழக்கிழமை கூறியுள்ளார்.