முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிலுள்ள மலசலகூடத்தை சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில், அவரது மனைவி தமது முகத்தை மலசலகூட கொமட்டிற்குள் வைத்து, அசுத்தமான நீரை தம்மீது திறந்து விடுவார் என பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய பெண்ணொருவரே, பொலிஸாருக்கு இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த 11 பெண்களில் ஒருவரே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார். ரிஷாட் பதியுதீனின் மனைவி மாத்திரமன்றி, அவரது உறவினர்களும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு பாரிய துன்புறுத்தல்களை வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் வீட்டிலுள்ள விளக்குமாறு உடையும் வரை, பணிப் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 11 பேரில், 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர். ஒரு யுவதி பம்பலபிட்டி ரயில் தண்டவாளத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், மற்றைய யுவதி நோய்க்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
அத்துடன், இஷாலினி தீ காயங்களுடன் மர்மமான முறையில் கடந்த 15ம் திகதி உயிரிழந்திருந்தார். ஏற்கனவே உயிரிழந்த யுவதிகளின் மரணங்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் தாயத்துக்களைப் பெறத் தொடங்கியுள்ளனர்.
இதேவேளை, ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த அனைத்து பெண்களிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.