பயாகல – கொரகதெனிய பிரதேசத்தில் நடைபெற்ற பூப் புனித நீராட்டு விழாவில் கலந்துக் கொண்ட 85 பேருக்கு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அதில் கலந்து கொண்ட உறவினர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி பூப்புனித நீராட்டு விழாவை வீட்டில் நடத்தத் திட் டமிடப்பட்டிருந்த நிலையில், பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் நிறுத்தப்பட்டன.
அதன் பின்னர் கடந்த ஜூலை 26 ஆம் திகதி அந்த வீட்டுக்கு உணவு பொதிகளை வழங்கு வதற்காக சென்ற நபருக்கு நோய் ஏற்பட்டதைத் தொடர்ந்து விரைவான ஆன்டிஜென் பரிசோதனை மேற் கொண்டபோது குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று பரிசோதனையின் போது 23 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 212 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 62 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைச் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.