பாடசாலைகளை ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 2, 2021

பாடசாலைகளை ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!

 மாணவர்களின் எண்ணிக்கை 100 ஐ விடக் குறைந்த பாடசாலைகளை ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


இது ஆரம்ப கட்டம் எனவும், சுகாதார பிரிவின் பூரண வழிகாட்டல்களைப் பின்பற்றி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளை ஆரம்பித்த பின் வருகை தரும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமானது எனவும் கல்வி அமைச்சர் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் எண்ணிக்கை 50 ஐ விடக் குறைந்த சுமார் ஆயிரத்து 439 பாடசாலைககள் மற்றும் 51-100 வரையான எண்ணிக்கையைக் கொண்ட ஆயிரத்து 523 பாடசாலைகளுமாக 2 ஆயிரத்து 962 பாடசாலைகளை முதல் கட்டமாக ஜுலை மாதத்தில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.