தாவடி – தோட்டவெளியில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாள்கள் இன்று (03) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மருதனார்மடம் சந்தைக்கு பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள், நேற்றுமுன் தினம் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தோர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களை தேடிச் சென்ற போதே வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.