40 சிறுவர்கள் உற்பட 80 பேரை கொத்தடிமைகளாக விற்பதற்கு முயற்சி செய்த கும்பல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 2, 2021

40 சிறுவர்கள் உற்பட 80 பேரை கொத்தடிமைகளாக விற்பதற்கு முயற்சி செய்த கும்பல்!

 உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 40 சிறுவர்கள் உள்ளிட்ட 80 பேரை கொத்தடிமைகளாக விற்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



குறித்த மாநிலத்தில் இருந்து பஞ்சாப் செல்லும் கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலில் 80 பேரும் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மீட்கப்பட்ட 40 சிறுவர்களும் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.