இலங்கையில் மாத்திரமே குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கிறது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 2, 2021

இலங்கையில் மாத்திரமே குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கிறது!

 தெற்காசியாவில் இலங்கையில் மாத்திரமே குறைந்த விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கும் விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ. சானக, எரிபொருள் விலையை குறைக்க வேண்டுமென, பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.



கட்டுநாயக்கவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், உலக சந்தையில் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனாவுக்கு கோவில் கட்டிய விவசாயி


தெற்காசியவில் உள்ள ஏனையநாடுகளிலும் பார்க்க இலங்கையிலேயே குறைவான விலைக்கு எரிபொருள் கிடைக்கிறது எனவும் தெரிவித்தார்.


உலகில் எரிபொருள் குறைவான விலைக்குக் கிடைக்கும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருக்கிறது. எனினும் மக்கள் தற்போது சிரமங்களுக்கு முகங்கொடுத்து இருப்பதால், எரிபொருள்களின் விலையை குறைக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.