முன்னாள் அமைச்சர் ரிஷாத் வீட்டில் உயிரிழந்த சிறுமி நடந்தது என்ன? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, July 17, 2021

முன்னாள் அமைச்சர் ரிஷாத் வீட்டில் உயிரிழந்த சிறுமி நடந்தது என்ன?

 


முன்னாள் அமைச்சரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியில் இருந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு சட்டரீதியான தீர்வினை பெற்றுத்தருமாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். 


ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்கு கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.


இந்த நிலையில் அவர் கடந்த 3ஆம் திகதி தீக்காயங்களுக்கு இலக்காகிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று முன்தினம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 


இந்த சிறுமியின் மரணம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார்.


இதன்போது குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாகவும், கல்வி கற்கும் வயதில் சிறுமியை வேலைக்கு அமர்த்தியமை தொடர்பாகவும் விரிவான விசாரனைகளை மேற்கொண்டு சட்டரீதியான தீர்வினை பெற்றுத் தருமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.