முல்லைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்; எமனான எருமை மாடு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 16, 2021

முல்லைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்; எமனான எருமை மாடு!

 


முல்லைத்தீவு புளியங்குளம் பகுதியில் நேற்று அதிகாலை வீதியில் நின்ற எருமை மாட்டுடன் மோதுண்டு இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் யுவதி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீதியின் புளியங்குளம் பகுதியில் இந்த விபத்து நடந்தது.

முத்துஐயன் கட்டுப்பகுதியில் இருந்து கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் வேலை செய்யும் இளம் யுவதியினை கொக்குத்தொடுவாய் பகுதிக்கு உந்துருளியில் ஏற்றி சென்றபோது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் வவுனியா ஓமந்தையை சேர்ந்த கதிர்காமநாதன் நிலோஜன் (24) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.