யால தேசி வனவிலங்கு பூங்காவிற்குள் புதையல் ? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 15, 2021

யால தேசி வனவிலங்கு பூங்காவிற்குள் புதையல் ?

 


யால தேசிய பூங்காவிற்குள் பாரியளவிலான புதையல்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் அந்த மிகப்பெரிய புதையலை வெளியே எடுக்க இரகசிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுவரையில் யால தேசி வனவிலங்கு பூங்காவிற்குள் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் விசேட திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அந்த இடத்திற்கு செல்வதற்காக வீதிகள் மற்றும் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


யால காடு மிகவும் பெறுமதியான ஒன்று எனவும் இதுவரையில் அங்கு மிருகங்கள் அதிக அளவில் வாழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அந்த பூங்கா இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் தேடித் தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.