யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் தொடர் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த இருவர் அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
நாவற்குழியில் பல வீடுகளில் ஆட்களில்லாத வேளைகளில் களவு மற்றும் வழிப் பறிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இச் சம்பவங்களுடன் தொட்புடையவர்கள் மேலும் பலர் தேடப்பட்டு வந்த நிலையில் கைதடி பாலத்திற்கு அண்மையில் உள்ள வெளியில் வைத்து பொலிஸார் மற்றும் இளைஞர்கள் இணைந்து இருவரையும் கைது செய்துள்ளனர்.