ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஷில் ராஜபக்ஷ அண்மையில் அமெரிக்கா சென்றதை தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்புக்கு மத்தியில் அவர் தற்போது சீனாவுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
போர்ட் சிட்டி தொடர்பிலான மேலதிக பேச்சுக்களை நடத்துவதற்காக அவர் சீனா சென்றிருப்பதாகவே கூறப்படுகின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நெருக்கமான சில ஊடகங்கள், பஷில் ராஜபக்ஷ இரகசியமாக நாடு திரும்பியிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றன.
தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.