இன்றயைதினம் மேலும் 33 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 25, 2021

இன்றயைதினம் மேலும் 33 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணம்!

 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.



அதனடிப்படையில் நேற்று (24) 05 கொவிட் மரணங்கள் இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.


மேலும், மே மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை கொவிட் நோயாளர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மே 17 ஆம் திகதி ஒருவரும், மே 19 ஆம் திகதி 03 மரணங்களும், மே 20 ஆம் திகதி 02 மரணங்களும், மே 21 ஆம் திகதி 04 மரணங்களும், மே 22 ஆம் திகதி 10 மரணங்களும், மே 23 ஆம் திகதி 08 மரணங்களும், பதிவாகியுள்ளன.


Advertisement


அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,243 ஆகும்.


மஹகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 46 வயதுடைய ஆண் ஒருவர், ஹொரன ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 21 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்னாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 51 வயதுடைய ஆண் ஒருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலென்பிந்துனுவௌ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய பெண் ஒருவர், அநுராதபுரம் மெத்சிறிசெவன போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதவாச்சி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 51 வயதுடைய ஆண் ஒருவர், அநுராதபுரம் மெத்சிரிசெவன போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, தீவிர சுவாசக் கோளாறு மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

பண்டாரகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 20 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் மோசமடைந்த நிலைமை மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

வெல்மில்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய ஆண் ஒருவர், ஹொரன ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவுடன் மோசமடைந்த நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மஹகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 46 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 21 ஆம் திகதியன்று ஹொரன ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட சுவாசத் தொகுதி தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹல்க்ரன்ஓயா பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்பளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவர், கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகொல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 61 வயதுடைய பெண் ஒருவர், மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் புற்றுநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

பன்னல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 47 வயதுடைய பெண் ஒருவர், நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு 12 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 56 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் இதயநோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

பொரளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

தெமட்டகொடை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, உயர் குருதியழுத்தம் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கொழும்பு 13 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்ப தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 21 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு 02 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 77 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 23 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு 13 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 24 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நானுஓயா பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே மாதம் 19 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே மாதம் 23 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய பெண் ஒருவர், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 19 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 55 வயதுடைய பெண் ஒருவர், நாலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 20 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 79 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 22 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கினிமெல்லகஹ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 104 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 22 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிங்தோட்டை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 92 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 22 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 22 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிட்டம்புவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய ஆண் ஒருவர், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 89 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 23 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரதாவான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 22 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நுரையீரல் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டாரகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய ஆண் ஒருவர், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 21 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, மோசமான சுவாசக் கோளாறு மற்றும் குருதி நஞ்சானமை போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்பாத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 19 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமை, கொவிட் 19 தொற்று, இதயநோய் மற்றும் மூச்சிழுப்பு நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.