நைஜரில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவர்கள் உயிரிழப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 14, 2021

நைஜரில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவர்கள் உயிரிழப்பு!

 மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் உள்ள பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவர்கள் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர்.



தலைநகர் நியாமியின் புறநகரில் உள்ள ஆரம்ப பாடசாலையிலேயே புதன்கிழமை மாலை 4 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீப்பிடித்த நேரத்தில் 7 முதல் 13 வயதுக்குட்பட்டவர்கள் வகுப்பில் கலந்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியாமி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள முன்னாள் களிமண் குவாரியில் மரம் மற்றும் வைக்கோலால் கட்டப்பட்ட குடிசையின் ஊடாக இந்த தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், எவ்வாறு தீ பரவியது என்பதற்கான காரணம் உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.