கடந்த 24 மணித்தியாலங்களில் 123 விபத்துக்கள் பதிவு – 10 பேர் உயிரிழப்பு: 77 பேர் காயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 14, 2021

கடந்த 24 மணித்தியாலங்களில் 123 விபத்துக்கள் பதிவு – 10 பேர் உயிரிழப்பு: 77 பேர் காயம்

 நாட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை 06 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போது விபத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று 12 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த காலகட்டத்தில் நாட்டில் மொத்தம் 123 விபத்துக்கள் பதிவாகியுள்ளன என்றும் அவற்றில் 77 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.


இந்த விபத்துக்கள் அனைத்தும் பொலிஸில் பதிவாகிய விபத்துக்கள் என்றும் இந்த நிலையில், பதிவு செய்யப்படாத சம்பவங்கள் அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த விபத்துக்களில் 53 மோட்டார் சைக்கிள்கள், 30 முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் சிக்கியுள்ளதாக அவர் கூறினார்.


விபத்துக்களில் தொடர்புடைய வாகனங்களின் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இதேநேரம், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.