யாழில் உள்ள ஒரு விசித்திர மனிதர் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 24, 2021

யாழில் உள்ள ஒரு விசித்திர மனிதர் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்!

யாழில் வீட்டுக்கு முன்பாகவுள்ள வீதியை மேவி கொங்கிறீற் போட்ட விசித்திரமான மனிதர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.



சாவகச்சேரியைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த அடாவடிக் கோமாளித்தனத்தை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சங்கத்தானை இத்தியடிப் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த குறித்த விசித்திரமான வீட்டுக்காரர் நகரசபைக்கு சொந்தமான கார்பெட் வீதியை சேதமாக்கியதுடன் அதற்கு மேலாக சீமெந்து மேடு ஒன்றினையும் கட்டியுள்ளார்.


குறித்த சீமெந்து மேடு அவ்வீதியால் பயணம் செய்யும் மக்களை குத்துக்கரணம் அடித்து விழுந்தெழ வைப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவடுகின்றன.


அந்த வீதி நகரசபைக்கு சொந்தமானதாக காணப்பட்டபோதும் இந்த விசித்திர மனிதரின் செயற்பாட்டினை நகரசபையும் கண்டுகொள்ளவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.