பட்டி தொட்டி எங்கும் முணுமுணுக்கும் என்ஜாய் எஞ்சாமி- பாடகி தீ இலங்கையை சேர்ந்தவரா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 24, 2021

பட்டி தொட்டி எங்கும் முணுமுணுக்கும் என்ஜாய் எஞ்சாமி- பாடகி தீ இலங்கையை சேர்ந்தவரா?

 பட்டி தொட்டி எங்கும் தற்பொழுது எல்லோரும் முணுமுணுக்கும் பாடல் என்ஜாய் எஞ்சாமி தான். சந்தோஷ்நாராயணன் இசை யமைத்துள்ள இப்பாடலினை அறிவுடன் இணைந்து சந்தோஷ் நாராயணின் வளர்ப்பு மகளான தீ பாடியுள்ளார்.



இந்நிலையில் பாடகி தீ இன் தந்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது சந்தோக்ஷ் நாராயணின் மனைவியின் மகளே தீ ஆவார். எனினும் தனது தந்தையை போல உயர்ந்தவர் யாரும் இல்லையென பாடகி தீ , சந்தோக்ஷ் நாராயணனை குறிப்பிட்டு பெருமையாக கூறியுள்ளார்.


இதேவேளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக தொடங்கியுள்ள மாஜா தளத்தில் முதல் பாடலாக வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் சர்வதேச அளவில் 39 மில்லியன்கள் பார்வையாளர்களை கடந்து பிரபலமாகி வருகிறது.


மேலும் யூடியூப் தளத்தில் ஒரு பாடல் வெளியாகி 2 வாரங்கள் ஆகும் சூழலில் இந்த அளவுக்கு இசை ரசிகர்களால் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை எனவும் சொல்லப்படுகின்றது.