இங்கிலாந்தில் உள்ள பெண் ஒருவர் விபரீத நோயொன்றினால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் , அவர் எந்த ஒரு ஆணை பார்த்தாலும் அதே இடத்தில் அவர் மயங்கி விழும் விபரீதம் நடந்துள்ளதாக கூறப்படுகின்றமை பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதனின் உடல் தான் இருப்பதிலேயே மிகவும் சிக்கலான ஒரு இயந்திரம் எனக் கூறுவார்கள். அறிவியல் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் கூட, பல புதுசு புதுசாக நோய்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.
சில நேரங்களில் இப்படி கூட ஒரு நோய் இருக்குமா எனத் தோன்ற வைக்கும் வண்ணம் சில நிகழ்வுகள் நடக்கும். அப்படியான ஒரு பெண் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டி பிரவுன். 32 வயதான இவருக்கு இருக்கும் பிரச்சனை சற்று வித்தியாசமானது. அவர் ஒரு வகையான அபூர்வ மூளை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்படி எந்த உணர்ச்சியானாலும், அது கோபமோ, சிரிப்போ, பயமோ அல்லது கவர்ச்சியாக இருந்தால் கூட உடனே மயங்கி விழுந்து விடுவார்.
குறிப்பாக கிறிஸ்டி வெளியே செல்லும் போது கவர்ச்சியான ஒரு ஆணை பார்க்கிறார் என்றால் அடுத்த நொடியே, அதே இடத்தில் அவர் மயங்கி விழும் விபரீதம் நடந்துள்ளது. இதன் காரணமாகவே கிறிஸ்டி வெளியே செல்வது இல்லையாம்.
மிகவும் அவசியம் என்றால் மட்டுமே வெளியே செல்லும் அவர், யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் தலையைக் குனிந்தவாறே செல்வது வழக்கம்.
இதுகுறித்து பேசிய கிறிஸ்டி, இந்த பிரச்சனை எனக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கிறது. என்னால் மற்றவர்கள் போலச் சாதாரணமாக வெளியில் நடமாட முடியவில்லை. ஆனால் இந்த பிரச்சனையில் ஒரு நன்மையும் உள்ளது. யாராவது என்னிடம் சண்டை போட்டால், நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தவுடன் நான் மயங்கி விழுந்து விடுவேன். அந்த சண்டையும் நின்று விடும் என வேடிக்கையாகக் கூறியுள்ளார்