திருகோணமலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 18, 2021

திருகோணமலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

 திருகோணமலை, முதலியார்குளம் குளத்துக்கு அருகில் இன்று காலை இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


அநுராதபுரம், விகார ஹல்மில்லகுளம், பியந்த மாவத்தையைச் சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத் பிரசாத் குமார (24 வயது) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றி வரும் இவர், குடும்பத்தகராறு காரணமாக அவர் கடமையாற்றிக் கொண்டிருந்த இடத்துக்கு முன்னாலுள்ள குளத்துக்கு அருகில் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு, திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி சென்று, மரத்தில் தொங்கிய நிலையிலிருந்த சடலத்தை பார்வையிட்டதாகவும் மரணத்தில் எதுவித சந்தேகமும் இல்லை என உறவினர்கள், பொலிஸாரிடம் கூறியதை அடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.