பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் எடுத்த முடிவு “குறைபாடு” என்றும் சட்டவிரோதமானது என்றும் Proscribed Organisations Appeal Commission என்ற தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் அந்த முடிவின் அடிப்படையில், இந்த தடையை நீக்க ஆணையம் கேட்டுள்ளது.
இதேவேளை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இன்று (மார்ச் 18) இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவாதத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
பிரித்தானிய பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களான Siobhain, McDonagh,Elliot Colburn மற்றும் Edward Davey ஆகியோர் விவாதத்தை கோரியுள்மை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.