அமைச்சர் டக்ளஸை சந்திப்பதா? அந்த பேச்சுக்கே இடமில்லை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 18, 2021

அமைச்சர் டக்ளஸை சந்திப்பதா? அந்த பேச்சுக்கே இடமில்லை

 ஜனாதிபதியின் பணிப்பின் பெயரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த நிலையில், தாம் அவரை சந்திக்கப்போவதில்லை என வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோ.கலாரஞ்சினி கூறியுள்ளார்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.


இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோதே எங்கள் உறவுக்ள அதிகம் காணாமல் ஆக்கப்பட்டனர்.


அந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷ அரசின் காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு அரசோ அவ்வரசில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவினாலோ எந்த தீர்வும் கிடைக்கவில்லை எனவும் கலாரஞ்சனி சுட்டிக்காட்டினார்.


அதோடு தங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபியும் காரணம் எனத் தெரிவித்த தாய்மார்களை நீதி மன்றில் நிறுத்தப் போவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாம் அவரை எப்படி சந்திக்க முடியும்? அவ்வாறு சந்தித்ததாலும் அமைச்சரால் எங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் தொடர்பில் என்ன நியாயத்தை பெற்றுத் தரமுடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.