இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம்! வெளியானது உத்தியோகபூர்வ முடிவுகள் (நேரலை) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, March 23, 2021

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம்! வெளியானது உத்தியோகபூர்வ முடிவுகள் (நேரலை)

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற நிலையில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



அதன்படி 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ள நிலையில், 14 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன.


இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம்! வெளியானது உத்தியோகபூர்வ முடிவுகள் (நேரலை)

 



முதலாம் இணைப்பு - பலத்த எதிர்பார்ப்பில் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை! வாக்கெடுப்பு தயார் நிலையில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பானது இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகும் எதிர்பார்க்கப்படும் நிலையில் வாக்கெடுப்பிற்கான தயார்ப்படுத்தல்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த பிரேரணைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.


இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள அதேவேளை, இதில் இந்தியாவின் நிலைப்பாடு பலரது எதிர்பார்ப்பிற்கும் உள்ளாகியுள்ளது.


இலங்கை அரசாங்கம் இந்தியா குறித்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள போதும் கூட இந்திய அரசாங்கம் இது தொடர்பில் மௌனம் சாதித்தே வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


மேலும், வாக்கெடுப்பு இடம்பெறும் பிரதான மண்டபத்தில் இலங்கை பிரதிநிதியொருவர் அமர்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.