பதுளை பசறை வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது.
லுனுகலை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இன்று அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதுளை – பசறை 13 ஆம் கட்டை பகுதியில் பயணித்த பஸ் ஒன்று சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இந்த விபத்தில் 31 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
, விபத்தில் பஸ் சாரதி உட்பட 30 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் பதுளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.