கொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 8, 2021

கொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்

 கொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் புதைக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு 10 மணியளவில் படல்கும்புர பொது மயானத்தில் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.


படல்கும்புர புத்தல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான உப பொலிஸ் பரிசோதகரான ஏ.எம்.பிரேமசிறி தற்கொலை செய்திருந்தார்.


குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான திலினி யஷோதா என்ற திருமணமாகாத பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்த நிலையில் அவரை குறித்த பொலிஸ் பரிசோதகர் கொலை செய்துள்ளார்.


கொலை செய்த பின்னர் கடந்த 2ஆம் திகதி வீட்டிற்கு வந்த உப பொலிஸ் பரிசோதகர் அன்றைய தினம் இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று இரவு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


சடலத்தை பொறுப்பேற்ற குடும்பத்தினர் அதனை வீட்டினுள் வைக்காமல் வெளியே அரை மணி நேரம் வைத்து விட்டு இறுதி அஞ்சலி செலுத்தாமல் மத வழிப்பாடுகளின்றி சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.


இந்த சந்தர்ப்பத்தில் எவ்வித பொலிஸ் அதிகாரியும் கலந்து கொள்ளவில்லை. உயிரிழந்தவரின் மனைவி மற்றும் 3 பிள்ளைகள் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளே இருந்துள்ளனர்.


பின்னர் பொலிஸ் அதிகாரியின் உறவினர்கள் சிலர் சடலத்தை கல்லறைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்.