காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, February 18, 2021

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!

 நாவலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவ்வாகம பகுதியை சேர்ந்த ஆர். ஆதித்தியன் என்ற இளைஞனே நேற்று (17) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



நாவலபிட்டிய நகரிலுள்ள மருந்தகமொன்றில் வேலை செய்யும் குறித்த இளைஞன் கடந்த 16 ம் திகதி காலை வீட்டிலிருந்து வேலைக்கு சென்று மீண்டும் திரும்பி வராத நிலையில் தேடப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையிலேயே அவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளர்



பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நாவலபிட்டி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மரண விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.


பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் நாவலப்பிட்டிய பொலிஸார் இளைஞனின் மரணம் கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.