இந்துக் கடவுள் வினாயகரை அவமதித்த வெளிநாட்டு பெண்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, February 18, 2021

இந்துக் கடவுள் வினாயகரை அவமதித்த வெளிநாட்டு பெண்!

 இந்திய மக்களையும், இந்துக் கடவுள்களையும் அவமதிக்கும் செயல்களை வெளிநாடுகளில் உள்ள சில பிரபலங்கள் தொடர்ந்து செய்து கண்டனத்திற்கு ஆளாகிறார்கள்.விவசாயிகள் பிரச்சினையில் குரல் கொடுத்த பாடகியும், நடிகையுமான ரிஹானா நேற்று டுவிட்டர் தளத்தில் தவறான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தால். வெறும் குட்டி டிரவுசரை மட்டும் அணிந்து மேலாடை எதுவுமில்லாமல் மார்பகப் பகுதிகளை தன் கையால் மூடியபடி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.


அப்புகைப்படத்தில் அவருடைய கழுத்து செயினில் வினாயகர் உள்ள டாலர் ஒன்று இடம் பெற்றுள்ளது.


அதற்கு இந்து மக்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து அவருக்கு கமெண்ட் செய்துள்ளனர்.


ஏற்கெனவே, இந்திய விவசாயிகள் போராட்டப் பிரச்சினையில் அவர் குரல் கொடுத்ததற்கு இங்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது வேண்டுமென்றே அவர் இந்துக் கடவுளை அவமதிக்கும் விதமாக இப்படி போஸ் கொடுத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.