5 பேரை திருமணம் செய்த டிக்டாக் பிரபலம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, February 18, 2021

5 பேரை திருமணம் செய்த டிக்டாக் பிரபலம்!

 மயிலாடுதுறையில் டிக்டாக் காதலியை நம்பி 3 லட்சம் ரூபாயுடன், தனது வாழ்க்கையையும் பறிகொடுத்து விட்டதாக இளைஞர் ஒருவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

டிக்டாக்கில் 4 இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களைத் திருமணம் செய்து ஏமாற்றியதோடு 5 வதாக இன்னொருவருடன் தற்போது அந்த டிக் டாக் கிளி வாழ்க்கை நடத்தி வருவது பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


முகநூலில் அறிமுகமான மீராவை, டிக்டாக் வீடியோவில் க்ளோசப்பில் பார்த்து சொக்கிப்போன ஓட்டுனர் பாலகுரு என்பவர் தன் காதலை வெளிப்படுத்த, தன்னை குறிப்பிட்ட சாதிப்பொண்ணு என்று கூறி பாலகுருவுக்கு டிக் அடித்த மீரா, அவரை காதல் வலையில் வீழ்த்தி திருமணமும் செய்து கொண்டுள்ளார்

திருமணம் முடிந்த சில நாட்களில் அவரது உண்மையான பெயர் ரஜபுன்னிஷா என்றும் வேற்று மதத்தை சேர்ந்த அவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும் பாலகுருவுக்கு தெரியவந்துள்ளது. இருந்தாலும் மீரா மீது கொண்ட காதலால் தொடர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் பாலகுரு . இந்த நிலையில் அவர் ஓட்டுனர் பணிக்கு சென்ற பின்னர் மீராவை சந்திக்க வேறு சில ஆண்கள் தனது வீட்டுக்கு வந்து செல்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் பாலகுரு.


இது குறித்து விசாரித்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீரா, அவரது வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தால் மீராகுறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து கழற்றிவிட்ட மீரா, 4 வதாக பாலகுருவை திருமணம் செய்ததும், அவரிடம் இருந்தும் பணத்தை எடுத்துக் கொண்டு 5 வதாக திண்டுக்கல்லை சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் சென்று விட்டதும் தெரியவந்துள்ளது.


உடனடியாக மீராவின் தாயை தொடர்பு கொண்டு, மீராவுக்கு பல ஆண்களுடன் பழக்கம் இருப்பதாக பாலகுரு ஆவேசமாக கூறிய நிலையில் அவரது தாய் அளித்த பதிலால் மிரண்டு போனார் பாலகுரு. தன்னுடைய ஆலோசனைப்படியே பலரை திருமணம் செய்து உள்ளார் என்று பெருமையாக கூறிய தாயார், நீ இந்த விஷயங்களில் இருந்து ஒதுங்கிக் கொள், இல்லை எனில் உன்னை கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளார்.


இதையடுத்து தனது உறவினர்கள் புடை சூழ மாயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்ற பாலகுரு, தன்னை ஏமாற்றி ஒரு பவுன் நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாயை எடுத்துச்சென்று விட்டதாகவும் மொத்தமாக 3 லட்சம் ரூபாயையும் தனது வாழ்க்கையையும் இழந்து தவிப்பதாக மீரா மீது புகார் அளித்தார் பாலகுரு.


டிக்டாக் மற்றும் முக நூலில் தனது வீடியோக்களை பதிவிட்ட மீரா, அதில் கமெண்ட் பதியும் நபர்களின் தீவிரத்தை பார்த்து காதலர்களை தேர்வு செய்துள்ளார் என்று பாலகுரு கூறும் நிலையில், பெரிய கருவாடுக்கு ஆசைப்பட்டு பொறியில் சிக்கிய பெருச்சாளி போல மீராவிடம் சிக்கிய 4 மாப்பிள்ளைகள் கோபத்தில் காத்திருக்க, 5 வது மாப்பிள்ளை பார்த்திபனோ மீராவிடம் அடுத்ததாக ஏமாறுவதற்கு காத்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றார் பாலகுரு.