வத்தளை - ஏகித்த சந்தியில் பாதையை கடக்க முற்பட்ட ஆசிரியை ஒருவர் பாரவூர்தியில் மோதி உயிரிழந்துள்ளார்.
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏகித்த சந்தியில் இன்று முற்பகல் 9.50 மணியளவில் பாதயை கடக்க முற்பட்ட பெண்ணொருவரின் மீது பாரவூர்தியொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சசிகலா ஜெகதீஸ்வரன் என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதன்போது, படுகாமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 10 நிமிடங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை பொலிஸார் விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதியை கைது செய்துள்ளனர். சந்தேக நபரான சாரதியை நாளை வெள்ளிக்கிழமை வெலிசர நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.