யாழ்.இணுவில் கந்தசுவாமி கோவில் பூசகரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, February 18, 2021

யாழ்.இணுவில் கந்தசுவாமி கோவில் பூசகரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு!

 யாழ்.இணுவில் கந்தசுவாமி கோவில் பூசகரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


இன்று காலை குறித்த மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு நபர் ஒருவர் சென்ற விடயம் சீ.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.


இந் நிலையில் குறித்த நபர் துரத்தி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அத்துடன் அவர்கள் களவாடிச்சென்ற மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.


மேலும் பூசகரின் மோட்டார் சைக்கிளை திருடியவர் ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.