காணாமல்போனோர் குறித்த அலுவலகம் இயங்குவதையும் நட்டஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, February 15, 2021

காணாமல்போனோர் குறித்த அலுவலகம் இயங்குவதையும் நட்டஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை!

 


காணாமல்போனோர் குறித்த அலுவலகம் இயங்குவதையும் நட்டஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து தமிழ் தேசிய நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை வழங்குவது மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கையாகும் எனவும் குறிப்பிட்டார்.

அதற்கு எதிர்ப்பை வெளியிடுவதென்பது ஒட்டுமொத்த நல்லிணக்க செயற்பாடுகளையும் எதிர்ப்பதற்கு ஒப்பானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்