கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக யாழ். மயிலிட்டியைச் சேர்ந்த சின்னையா-பஞ்சலிங்கம் (வயது-70) என்பவர் பிரான்சில் இன்று செவ்வாய்க் கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த சின்னையா-பஞ்சலிங்கம் புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார்.
கொரோனாத் தொற்று காரணமாக ஏற்பட்ட கிருமித் தொற்றுக்காரணமாக நுரையீரல் செயலிழந்த காரணத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.