யாழில் பெற்றோல் நிரப்ப தாமதமானதால் முகாமையாளர் மீது தாக்குதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, February 9, 2021

யாழில் பெற்றோல் நிரப்ப தாமதமானதால் முகாமையாளர் மீது தாக்குதல்!

 எரிபொருள் நிரப்பும் நிலைய முகாமையாளர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




நெல்லியடியிலுள்ள கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தமக்கு உடனடியாக எரிபொருள் நிரப்பவில்லையென தெரிவித்து, முகாமையாளர் மீது போத்தலால் தாக்கியுள்னர்.


சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.