தமிழர் தாயகத்தின் தன்னெழுச்சியான P2P கவனயீர்ப்பு போராட்டம் 2009 இற்கு பின்னான ஓர் திருப்புமுனையாகும்!!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, February 7, 2021

தமிழர் தாயகத்தின் தன்னெழுச்சியான P2P கவனயீர்ப்பு போராட்டம் 2009 இற்கு பின்னான ஓர் திருப்புமுனையாகும்!!!

 


சிங்கள அரச ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தமிழர்களோடு முஸ்லீம்கள் இணைந்திருப்பது மட்டுமல்ல, முஸ்லீம் மக்களது அரசியல், இணைந்த வாழ்வு ஆகியதான் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பானது என யாழ் முஸ்லீம் இளைஞர் கழகப்பிரதிநிதி அப்துல்லா தெரிவித்துள்ளார்.


தமிழர் தாயகத்தில் எழுச்சி கொண்டுள்ள 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை' எனும் அறவழிப்போராட்டதுக்கு, புலம்பெயர் தமிழர்களின் உறுதுணையினை வெளிப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த தோழமைக் கூட்டத்தில் கருத்துரைக்கும் போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.

சிங்கள பேரினவாதிகளாலும், கடும்போக்குவாதிகளாலும் தமிழர்கள் மீது நடத்தப்படுகின்ற செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த அப்துல்லா, சிங்கள குடியேற்றங்கள், நில அபகரிப்புக்களுக்கு எதிராக முஸ்லீம்கள் தமிழர்களோடு இணைந்து போராடவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த இணைந்த செயற்பாடு சக்திவாய்ந்தது மட்டுமல்லாது பலமானது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த  தமிழினவழிப்பு நினைவுத்தூபி இடிப்புக்கு எதிராகவும் தமது கண்டனத்தினை தெரிவித்திருந்தாக குறிப்பிட்டிருந்த அப்துல்லா, 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை' பேரணி யாழ் மண்ணில் கால் வைக்கும் போது தமது சமூகம் அதற்கு ஆதரவாக பங்கெடுக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இடம்பெயர்ந்த முஸ்லீம்களது மீளகுடியேற்றம் என்பது தமிழ்மக்களது அங்கீகாரத்துடனேயே சாத்தியம் என்பதனை வலியுறுத்திய அப்துல்லா, வடக்கு கிழக்கில் முஸ்லீம் மக்களது அரசியல், இணைந்த வாழ்வு ஆகியதான சிங்கள அடக்குமுறையாளர்களிடம் இருந்து முஸ்லீம்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் எனவும் அவர் இடித்துரைந்திருந்தார்.

முன்னராக யாழ் முஸ்லீம் இளைஞர் கழகம், 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை'யிலான அறவழிப்போராட்டத்துக்கு தமது ஆதரவினைத் தெரிவித்திருந்ததோடு, முஸ்லீம்களை 'தமிழர்களாக' அணிதிரளுமாறு அழைப்பும் விடுத்திருந்தது.

இதேவேளை, அப்துல்லாவின் தோழமையினை கூட்டத்தில் பங்கெடுத்திருந்த பலரும் வரவேற்றிருந்ததோடு, இரு சமூகங்களுக்கு இடையிலான இணைந்த செயற்பாட்டுக்கு நல்லதொரு தொடக்கமாக தற்போதைய நிகழ்வுகள் அமைந்துள்ளதென குறிப்பிட்டிருந்தனர்.

சமதான காலத்தில் விடுதலைப்புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மானுடத்துக்கான ஒன்றுகூடல் நிகழ்வானது, மானிடத்தின் குரலாக தமிழர்களது உரிமைகளுக்கான ஒலித்திருந்தனை நினைவூட்டிய நீதிக்கான கனேடிய தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு பிரதிநிதி திருமுருகவேந்தன், தியாகி திலீபன் காலத்தில் யாழ் பொம்வெளி, புதிய சோனகதெரு, ஒஸ்மேனியே கல்லூரி உட்பட ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கூட்டங்களையும் ஞாபகப்படுத்தினார்.1957ம் ஆண்டு சிறிலங்கா சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழரசுகட்சியினால் மேற்கொள்ளப்பட்ட கதவடைப்பு போராட்டத்தினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு முஸ்லீம்கள் துணைபுரிந்த சம்பவத்தினை குறித்துரைத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கலா தன்னாட்சி அதிகார சபை வரைவில், முஸ்லீம் மக்களது தனித்துவம் அதில் அங்கீகரிக்கப்பட்டு, சிறிலங்காவின் யாப்பினையும் விட, அதிகளவான உரிமைகள், அதிகாரங்கள் அந்த வரைவில் உள்ளடக்கப்பட்டிருந்ததனையும் குறித்துரைந்தார்.

இவ்வாறு யாழ் முஸ்லீம் இளைஞர் கழகப் பிரதிநிதி அப்துல்லா அவர்களது தோழமையினை பலரும் உற்சாகத்தோடு வரவேற்றிருந்ததோடு, தாயக மக்களது எழுச்சிப் போராட்டத்துக்கான தமது உறுதுணையினை வெளிப்படுத்தியிருந்தனர்.