ரொறன்ரோவிலும் முளைத்தது மர்ம தூண்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 1, 2021

ரொறன்ரோவிலும் முளைத்தது மர்ம தூண்!

 உட்டா பாலைவனத்திலும், வார்சாவிலும், ருமேனிய மலையடிவாரத்திலும் தோன்றியதைப் போன்ற மர்மமான உலோகத் தூண்- ரொறன்ரோவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நான்கு மீட்டர் உயரமான பளபளப்பான இந்த உலோக அமைப்பு, வெற்று போத்தல் போல காணப்படுகிறது. இது நேற்று நகரின் கரையில் காணப்பட்டதாக கனடிய ஊடகங்கள் தெரிவித்தன.

இதேபோன்ற தூண்கள் வான்கூவரிலும், வின்னிபெக்கிலும் ஏற்கனவே தென்பட்டதாக கூறப்படுகிறது.