கடலிலும் கொரொனா பரவும் அபாயம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 1, 2021

கடலிலும் கொரொனா பரவும் அபாயம்!

 ஆறுகள், நீரோடைகள் கடலில் கலப்பதால் கடலிலும் கொரோனா வைரஸ் தொற்றும் அபாய நிலை அதிகரிக்கலாம் எனக் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான முகக் கவசங்கள் கடலில் கலப்பதாகத் தெரிவித்துள்ள கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, இதனால் பொழுதுபோக்குக்காகக் கடலுக்குச் செல்வோருக்கும் கொரோனாத் தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் எச்சரித்துள்ளது.

தினமும் 5 இலட்சம் முகக் கவசங்கள் இலங்கையில் பயன்படுத்தப்படும் அதேவேளை, பெருமளவு முகக் கவசங்கள் தினமும் வீசப்படுகின்றன எனவும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு மாநகர சபையின் கீழ் வீதிகளைச் சுத்தம் செய்வதற்காக 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், முகக் கவசங்கள் உரிய முறையில் அகற்றப்படாமை காரணமாக, இந்தத் தொழிலாளர்களும் கொரோனா அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் எனவும் கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.