பிக்பாஸில் சீக்ஷன் நான்கில் முதல் பரிசை வென்ற ஆரிக்கு கிடைத்த பரிசு தொகையை விட , பிக்பாஸ் வீட்டில் அவர் இருந்ததற்கான சம்பளம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 நிறைவடைந்துஇருந்தது .
பிக்பாஸ் நிகழ்ச்சியில்ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு, அவர்களின் பிரபலத்திற்கு ஏற்றார்போல சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் இம்முறை போட்டியாளராக கலந்து கொண்ட பிரபலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதில் பிக் பாஸ் 4-ல் கலந்து கொண்டள்ள போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாயும் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாயும் போட்டியாளர்கள் பெற்றுள்ளனர்.
அத்துடன் இந்த சீசனில் ரமேஷின் சம்பளம் ரூ.60,000. பாடகர் வேல்முருகனுக்கு ரூ.50,000. ரியோவுக்கு ஒருநாளுக்கு ரூ.35,000. ஆஜித்துக்கு ரூ.15,000. பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் மூவருக்கும் நாளொன்றுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டு இருக்கிறது.
யார் யார் எத்தனை நாட்கள் இருந்தார்களோ அந்த நாட்களை கணக்கு செய்து வரி பிடித்தம் போக மீதி கையில் கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல் இதில் நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் விரும்பி வழங்கும் பரிசுப் பொருட்களும் தனி என்கிறார்கள்.
அத்தோடு முதல் பரிசை வென்ற ஆரிக்கு 50,00,000 பரிசாக வழங்கப்பட்டது. அதில் 30 சதவீதம் வரி போக 35,00,000 கிடைக்கும். மேலும், பிக் பாஸ் வீட்டில் அவர் 105 நாள் இருந்ததை கணக்கு செய்து பார்க்கையில் நாளுக்கு 85,000 என்ற வீதம் 89,25,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 30 சதவீதம் வரி போக 62,47,500 ரூபாயை பெற்றுள்ளார். மொத்தத்தில் 35,00,000 பரிசுத்தொகை மற்றும் 62,27,500 ரூபாய் சம்பளம் என மொத்தம் ஆரி 97,47,500 ரூபாயை பிக் பாஸ் மூலம் பெற்றுள்ளார்.