பேராதனை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை தாக்கி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கேகாலை தம்மிக்கவை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்மிக்கவினால் தாக்கப்பட்ட வைத்தியர் பேராதனை பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார். அதற்கமைய கேகாலை பிரிவு பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் கேகாலை தம்மிக்கவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு தம்மிக்க தன்னை திட்டி அச்சசுறுத்த ஆரம்பித்துள்ளார். அதன் பின்னர் தன்னை தாக்கியதாக வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கேகாலை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.