இலங்கையில் கடந்த 18 நாட்களில் மாத்திரம் இத்தனை கொரோனா மரணங்களா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 19, 2021

இலங்கையில் கடந்த 18 நாட்களில் மாத்திரம் இத்தனை கொரோனா மரணங்களா?

 இவ்வருடத்தின் நிறைவடைந்த கடந்த 18 நாட்களில் மாத்திரம் நாட்டில் 10,437 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் 10,400 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

கடந்த 18 நாட்களில் பதிவான கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 66 ஆகும்.

இதேவேளை, இலங்கைக்கு சுற்றலாப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் காலி தடல்ல பிரதேச ஹோட்டலில் மேலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கேகாலை, ஹெட்டிமுல்லை மற்றும் காலி, மஹமோதர பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

இதற்கு முன்னர் குறித்த ஹோட்டலின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.