இலங்கையில் சுகாதாரத்துறை தற்போது முற்றாக முடங்கியுள்ளது – முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆவேசம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, December 18, 2020

இலங்கையில் சுகாதாரத்துறை தற்போது முற்றாக முடங்கியுள்ளது – முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆவேசம்

சுகாதாரத்துறை தற்போது முற்றாக செயலிழந்துள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.



அத்துடன் சுகாதார அமைச்சும், அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கைப்பாவையாக மாறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,



நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவும் போது, தகுதியான 70இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சுகாதார அமைச்சுக்குள் இருக்கின்றனர்.


அடுத்த 72 மணி நேரத்திற்குள் நிர்வாக நடவடிக்கைகளுக்கு தேவையான மருத்துவர்களை தவிர ஏனைய மருத்துவர்களை அமைச்சில் இருந்து நீக்கி, அவர்களை வைத்தியசாலைகளுக்கு நியமிக்க வேண்டும்.


அப்படி முடியாது என்றால், சுகாதாரத் துறையின் ஏனைய தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் அமைச்சின் பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும்.


ஒவ்வொரு நபர்களும் கனிகளை பறித்துக் கொள்ளவும், தமது மடியை நிரப்பிக் கொள்ளவும் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வரவில்லை.


இதனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் என்று பெருமை பேசிக்கொண்டிருக்காது சரியாக செயற்படுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.


அப்படியில்லை என்றால் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர தலையீடுகளை மேற்கொண்டது போல், வீட்டுக்கு அனுப்பவும் முன்நின்று செயற்படுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.