நாவல – சேனாநாயக்க மாவத்தை பகுதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ராஜகிரியவை சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.