நடிகை அமலா பால் தனிமையில் மது அருந்துவதைப் போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அமலா பால் சமீபத்தில் தனது முன்னாள் காதலர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். லொக்டவுன் ஆரம்பித்திலிருந்தே அமலா பால் வெளியே தலைகாட்டாமல் தனிமையில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு வந்தார். நவராத்திரி தினங்களில் தனது ஆன்மிகப் பயணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
விவாகரத்து, விவாகரத்துக்கு பிறகு ஒரு காதல், இரகசிய திருமணம், முன்னாள் காதலர் வெளியிட்ட முத்தமிடும் போட்டோ என ஏகபோக பிரச்சனையில் உள்ள அமலா பால், தற்போது அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இப்போது, மது அருந்துவதைப்போன்ற ஒரு போட்டோவை தனது ருவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.