புரேவி புயல் காரணமாக பெய்த கடும் மழை காரணமாக மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு குளப் பகுதியில் மேச்சலுக்கு சென்ற அதிகளவான கால் நடைகள் பலியாகியுள்ளதுடன் அதிகளவான கால்நடைகள் காணாமல் போயுள்ளது.
மன்னார் பெரியமடு குளத்தை அண்டிய பகுதியில் மேச்சலுக்காக சென்ற நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட காற்றுடன் கூடிய தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் அதிக அளவான மாடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதுடன் சில மாடுகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து குறித்த பெரிய மடுப் பகுதியில் காணமால் போன கால் நடைகளை மீட்கும் பணிகளை கடற்படை , இரணுவம் மற்றும் பொது மக்களின் பக்களிப்புடன் நேற்று சனிக்கிழமை(5) மாலை இடம் பெற்றது.
இதன் போது அதிகமான மாடுகள் உயிரிழந்த நிலையில் மீட்;கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏனைய காணாமல் போன மாடுகளை மீட்கும் பணியில் கடற்படை மற்றும் மாவட்ட பிரதேச செயலகங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.