பருத்தித்துறையில் ஒருவர் கொரோனா தொற்றினால் இறந்தார் என வெளியான செய்தி போலியானது என சுகாதார வைத்திய அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார்.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீரிழிவு நேயாளியான அவர் நேற்று இரவு மரணமடைந்தார்.
அவரது வீட்டில் மகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர். மருத்துவபீட இறுதியாண்டு மாணவியான அவர் கொழும்பில் தங்கியிருந்து கல்வி கற்றவர். அண்மையில் வீடு திரும்பியிருந்தார். அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இரண்டு முறை பிசிஆர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இரண்டு முறையும் கொரோனா தொற்றினால் பதிக்கப்படவில்லையென்ற முடிவு வந்திருந்தது.
தந்தையார் உயிரிழந்ததையடுத்து, இ்று காலை அவரது உயிரியர் மாதிரிகளை பிசிஆர் பரிசோதனைக்காக பருத்தித்துறை வைத்தியசாலை நிர்வாகம் அனுப்பி வைத்திரந்தது.
பரிசோதனை முடிவுகளின்படி அவருக்கு தொற்று இல்லையென்பது உறுதியானது.