பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள் கவின், லாஸ்லியா ஜோடி. இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்கள் இவர்கள் இருவரும் தான்.
கவின் மற்றும் லாஸ்லியா காதலை ரசிகர்கள் தங்களுடைய காதலை போலவே சமூக வலைத்தளங்களில் கொண்டாட ஆரம்பித்தனர். அவர்களுக்கு கவிலியா என செல்லப் பெயரிட்டு கொண்டாடி வந்தனர்.
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பதைப்போல சினிமாவில் வரும் வில்லனைப் போல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையில் வந்து கவின் மற்றும் லாஸ்லியா காதலுக்கு முட்டுக்கட்டை போட்டார் தந்தை மரியநேசன். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை. அப்பா கேட்டுக் கொண்டதற்காக கவினை ஒரேயடியாக கழட்டி விட்டு விட்டாராம் லாஸ்லியா.
இதனால் திரிஷா இல்லைனா நயன்தாரா என தற்போது லாஸ்லியா இல்லை என்றால் வேறு பெண்ணே இல்லையா என்பதைப் போல சமீபகாலமாக ஒரு காஸ்ட்யூம் டிசைனர் ஒருவரை காதலித்து வருகிறாராம்.
விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும், அந்த கல்யாணத்துக்கு லாஸ்லியாவை அழைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதலை மறந்து தங்களுடைய சினிமா கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர் என்பதும் கூடுதல் தகவல்.