கிறிஸ்மஸ் தினத்தன்று தன்னை சந்திக்க மனைவி வராத விரக்தியில் தனது ஆணுறுப்பை
சிறைக்கைதியொருவர் அறுத்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றது.
கிறிஸ்மஸ் தினத்தன்று தென்மேற்கு ஸ்பெயினில் உள்ள புவேர்ட்டோ டி சாண்டா மரியாவில் உள்ள
புவேர்ட்டோ 3 சிறையில் இந்த சம்பவம் நடந்தது.
குறிப்பிட்ட சம்பவத்தில் ஈடுபட்ட கைதியிடம் அவரது மனைவி கிறிஸ்மஸ் தினத்தன்று அவரைப்
பார்க்க மறுத்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஸ்பெயினில் சிறை கைதிகள் பார்வையாளருடன் தனிப்பட்ட முறையில் பாலியல் உறவில் ஈடுபட
நேரத்தை செலவிட அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் சிறைச்சாலைக்கு வருகை தர தனது மனைவி மறுத்துவிட்டார் என்பதை அறிந்த
பின்னர் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் தனது
பிறப்புறுப்பை அறுத்து வீசியுள்ளார்.
இந்நிலையில் சிறை ஊழியர்கள் கைதியிடம் இரத்தப்போக்கு இருப்பதைக் கண்டறிந்தனர். அதைத்
தொடர்ந்து அவருக்கு மருத்துவ உதவியை வழங்குவதற்காக சிறையின் சுகாதார மையத்திற்கு
கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றினர். ஆனால் அவர்களால் வெட்டப்பட்ட பாலியல் உறுப்பை
மீண்டும் இணைக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அந்த நபர் ஏன் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் சரியாகத் தெரியவில்லை. மேலும் அவர் மனநல
பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன