இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரை சேர்ந்த தர்மேந்திரா என்பவர் அண்மையில் தனது 8-வது திருமண நாளை கொண்டாடினார்.
மனைவி சப்னாவிற்கு பூமியில் கிடைக்காத ஒன்றை பரிசளிக்க விரும்பிய இவர், நிலவில் உள்ள நிலப்பரப்பை விற்பனை செய்யும் அமெரிக்காவை சேர்ந்த லூனா சொஸைட்டி நிறுவனத்தை அணுகி மூன்று ஏக்கர் நிலத்தை வாங்கி பரிசளித்தார்.
‘அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்’ என்ற வைரமுத்துவின் பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் விதமாக தர்மேந்திரா வெளிப்படுத்திய அன்பால் அவரது மனைவி இன்பாதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் கூறிய தர்மேந்திரா,
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவரது பெண் ரசிகர் நிலவில் இடம் பெற்று பரிசாக வழங்கியதை பார்த்து தனது மனைவிக்கும் நிலவில் இடம் வாங்கியதாகக் கூறியுள்ள தர்மேந்திரா, நிலவில் இடம் வாங்க விண்ணப்பித்து ஓராண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை இந்திய மதிப்பில் சுமார் 2,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலவின் இடத்தை பங்கிட்டு தரும் “லூனா சொசைட்டி” நிறுவனம், அந்த இடத்தின் அச்சரேகை மற்றும் தீர்க்க ரேகையின் அளவுகளுடன் கூடிய வரைபடத்தை வழங்கும்.
இந்த நிலத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றாலும், வித்தியாசமான பரிசு வழங்க விரும்புபவர்கள் இதுபோன்று நிலவில் இடம் வாங்கி பரிசளிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.